அன்பு மற்றும் காதல் பற்றி ஓஷோ
அன்பு செலுத்துதல் சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு வழியாகும். நீங்கள் உங்களை அறிந்தவர்களாக விழிப்புணர்வுடன் இருப்பீர்கள் என்றால் இது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆம், அன்பு சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு வழியாகவே பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் பிறரை அன்பு செய்தீர்கள் என்றால் அவர் சுதந்திரமானவராக மாறுகிறார். நீங்கள் அடுத்தவரை சுதந்திரமானவராக மாற்றுகிற பொழுது பதிலுக்கு அவரும் உங்களை சுதந்திரமானவராக மாற்றுவார்.
அன்பு என்பது ஒரு பகிர்ந்து கொள்ளல். அது அடுத்தவரை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொள்ளுதல் அன்று.
உண்மையில் அன்பு என்பது பொறாமையற்றதாக, உடைமையாக்கிக்கொள்ளும் ஆசையற்றதாக இருக்க வேண்டும். அவ்வாறு பொறாமையற்றதாக, உடைமையாக்கிக்கொள்ளும் ஆசையற்றதாக இருக்கும் பொழுது அன்பு தெய்வீகத்தன்மை உடையதாக இருக்கின்றது. அன்பு, அழகு மற்றும் அழகின்மை என்கிற அடிப்படையில் உருவாவதில்லை. அதாவது செயற்பட, பிரதிபலிக்க, தியானிக்க தெரிந்த அன்புக்கு எப்பொழுதுமே சிந்திக்க தெரியாது. ஆம், சில சமயங்களில் நீங்கள் யாருடனாவது பொருந்திப்போவது நிகழ்கிறது. திடீரென்று எல்லாம் அழகான பொருத்தத்துடன் அமைகிறது. இது அழகு அல்லது அழகின்மை பற்றிய கேள்வி அல்ல. இது முழுமையான இசைவுடன் பொருத்தமாக இருப்பது பற்றிய கேள்வியாகும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருத்தமான ஆண் இந்த பூமியில் எங்கோ இருக்கிறான். அது போல ஒவ்வொரு ஆணுக்கும் பொருத்தமான பெண் இந்த பூமியில் எங்கோ இருக்கிறாள். அதாவது ஒவ்வொருவரும் தன்னுடைய நேர் எதிர் துருவத்துடன் பிறந்திருக்கிறார்கள். உங்களால் அவரை, உங்களுக்கு பொருத்தமானவரை கண்டுபிடிக்க முடிந்தால் உடனடியாக எல்லாம் இசைவுடையதாக அமைகிறது. இதுவே இருவருக்கிடையில் உண்மையான நேசத்தை உண்டாக்க முடியும். இது ஒரு மிகவும் அரிதான நிகழ்வாகும். உண்மையிலேயே பொருத்தமாக இருக்கிற ஒரு ஜோடியை காண்பது மிகவும் அரிதாகும். உண்மையான ஜோடியை, உண்மையான நண்பனை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட இயலாதது எனும் அளவிற்கு அவ்வளவு கட்டுப்பாடுகளும் அவ்வளவு தடைகளும் கொண்டதாக இருக்கிறது நமது சமூகம்.
கிழக்கு நாடுகளின் புராண இலக்கியங்களில் ஒரு கதை இருக்கிறது. ஆரம்ப காலத்தில் உலகம் உருவாக்கப்பட்ட பொழுது ஒவ்வொரு குழந்தையும் தனியாக பிறக்கவில்லை மாறாக ஜோடியாகவே பிறந்தன. ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் ஒன்றாக ஒரே தாயிடமிருந்து இரட் டையர்களாக, ஒருவருக்கொருவர் முழுமையாக பொருந்திப் போகிறவர்களாக பிறந்தார்கள். அவர்கள் தான் ஜோடி. அவர்கள் ஒருவருக்கொருவர் எல்லா விதத்திலும் பொருத்தமானவர்களாக இருந்தார்கள். பிறகு மனிதன் தன்னுடைய தரத்திலிருந்து கீழே விழுந்தான்(கிறிஸ்தவர்களின் முதல் பாவம் போன்று இதுவும் ஒரு கருத்து). அதற்குத் தண்டனையாக அப்போதிலிருந்து ஒரே தாயிடமிருந்து ஜோடிகள் பிறப்பதில்லை. இருப்பினும் அவ்வாறான ஜோடிகள் புவியில் எங்கோ பிறக்கத்தான் செய்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தெய்வீகமான ஜோடி எங்கோ இருக்கிறார்கள். ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் நீங்கள் வெள்ளைக்காரராக இருக்கலாம், உங்களுக்கு எதிர் காந்த ஈர்ப்பு சக்தியுடையவர் ஒரு கறுப்பராக இருக்கலாம். நீங்கள் ஹிந்துவாக இருக்கலாம், உங்களுக்கு எதிர் காந்த ஈர்ப்பு சக்தியுடையவர் ஒரு முஸ்லிமாக இருக்கலாம். நீங்கள் சீனராக இருக்கலாம், உங்களுக்கு எதிர் காந்த ஈர்ப்பு சக்தியுடையவர் ஒரு ஜெர்மனியராக இருக்கலாம்.
இன்னும், மேன்மையடைந்த ஒரு உலகில் மக்கள் தேடுவார்கள், நாடுவார்கள் இருப்பினும் அவர்களால் தங்களுக்கு பொருந்தக்கூடிய அந்த உண்மையான நபரை அவர்கள் கண்டுபிடிக்க முடியாதவரையில் அவர்கள் ஒரு விதமான மன இறுக்கத்துடனும், துக்கத்துடனுமே இருப்பார்கள். இப்பொழுது அறிவியல் ஆராய்ச்சிக்களின் மூலமாகவும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் பொருந்துகிற மனிதர்கள் இருக்கிறார்கள், பொருந்தாத மனிதர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தனக்கு முக்கியமானதாக இருக்கிற விஷயங்களை, தன்னுடைய ஜாதகத்தை, தனக்கு இசைவாக உள்ள விஷயங்களை அறிவிக்கலாம். இப்பொழுது ஒருவர் தன்னுடன் மிகச்சரியாக பொருந்தும் ஒருவரை கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் அனைத்தும் உள்ளன. நீங்கள் உங்களுக்கு பொருத்தமான ஒருவரை கண்டுபிடித்துவிட்டால் அழகு மற்றும் அழகற்ற தன்மை பற்றிய கேள்வியே இருக்காது.
உண்மையில் அழகற்றவர் என்று ஒருவரும் இல்லை. அழகானவர் என்றும் ஒருவரும் இல்லை.நீங்கள் அழகற்றவர் என்று நினைக்கும் ஒருவர், யாரோ ஒருவருடன் பொருந்திப் போகலாம். அப்பொழுது அவ்வழகற்றவர் அந்த நபருக்கு அழகானவராவார். அழகு என்பது பொருத்தத்துடன் இருப்பதன் நிழல் ஆகும். அழகான ஒருவரிடம் நீங்கள் காதல் கொள்கிறீர்கள் என்பது கதையல்ல. இந்த செயல்முறை நேர் எதிரானது. உண்மையில் நீங்கள் யாருடனாவது காதல் கொண்டால், அவர் உங்களுக்கு அழகானவராகத் தோன்றுகிறார். மெய்யான அன்புதான் அழகு என்கிற எண்ணத்தைக் கொண்டுவருகிறது.
ஆனால் உங்களுடன் முற்றிலும் பொருந்திப்போகும் ஒருவரை கண்டுபிடிப்பது அரிதானது. எப்பொழுதெல்லாம் ஒருவர் அந்த அளவு அதிஷ்டசாலியாக இருக்கிறாரோ அப்பொழுது வாழ்க்கை ஒரு இனிய இசையாக வாழப்படுகிறது. அப்பொழுது அங்கு இரு உடல்களும் ஒரு உயிரும் இருக்கிறது. அது ஒரு உண்மையான ஜோடி.நீங்கள் அந்த மாதிரியான ஜோடியை காணமுடிகிற பொழுதெல்லாம் அங்கு அவர்களைச் சுற்றி ஒரு அருமையான இசை, அருமையான வசீகரம், ஒரு அழகான ஒளி வட்டம், ஒரு அழகான ஒளி, ஒரு அமைதி இருக்கும்.
ஒருவருக்கு அழகான முகம் இருக்கலாம், நீங்கள் அதனால் ஈர்க்கப்படலாம். அழகான கண்கள், பெரிய கண்கள் இருக்கலாம், நீங்கள் கவரப்படலாம். அவரது முடியின் நிறம் உங்களை ஈர்க்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் முக்கியமல்ல. நீங்கள் சேர்ந்து வாழ்கிற பொழுது இரண்டு நாட்களுக்கு பின்னர் முடியின் நிறத்தை கவனிக்க மாட்டீர்கள். மூன்று வாரங்களுக்கு பின்னர் அவருடைய உருவ அமைப்பு பற்றி முழுவதும் மறந்துவிட்டிருப்பீர்கள். அப்பொழுது முக்கியமான விஷயமாக நீங்கள் கருதுவது ஒருவருக்கொருவர் ஆன்ம இசைவோடு இருப்பதாகத் தான் இருக்கும்.
"உலகமே ஒரு நாடக மேடை அதில் நாமெல்லாம் நடிகர்கள்" என்றார் ஆங்கிலேய இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர். ஆனால் இன்று உலகமே ஒரு சிறைச்சாலை ஆகி; நாமெல்லாம் அதில் சிறைக் கைதிகள் போல் ஆகிவிட்டோம். நாம் நவீன தொழிநுட்ப வளர்ச்சி கண்ட 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனிதன் முதிர்ச்சி அடைந்தவனாக இருக்கிறான். எனவே அவன் பல விஷயங்களை மாற்ற வேண்டியிருக்கிறது. ஏனென்றால் பல விஷயங்கள் தவறானவையாக இருக்கின்றன. அவை பழங்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. அப்பொழுது அவை தேவையாக இருந்தன; இனிமேல் அவை தேவையில்லை. அகரத்தை முதலாகக் கொண்ட அன்பே அகிலத்தின் உயிர் மூச்சாக இருக்கிறது. சிந்தித்து செயற்படுவோம்; நாளை நமதாகும்; வாழ்வு வளமாகும்.

"அகர உயிர் போல் அறிவாகி எங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து"

No comments:
Post a Comment