Sunday, 30 June 2019

3. ஒப்பிடாமை 


உலகில் மனிதர்கள் பலவிதம் என்றால் அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம். எது எப்படி என்றாலும் அதில் அரிதாக சில தவறுகளும் இருக்கத்தான் செய்கிறது. சிலர் சொல்வார்கள் போட்டி இருக்கனும் பொறாமை இருக்கக்கூடாது என்பார்கள். போட்டி போட்டு செயற்பட் டால் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையாயலாம் என்பவர்களே இவர்கள் தான்.

மகான் புத்தர் சொல்கிறார் "உன்னை நீ பிறருடன் ஒப்பிடும் போதெல்லாம் உன் சக்தியை இழக்கிறாய்" என்றார். பிறருடன் ஓப்பிடும் போது நம் சக்தியை நாம் இழக்கிறோம் என்பது ஒரு புறம் இருக்க நம்மையே நாம் இழந்துவிடுகின்றோம் என்பதே உண்மை. அவனுக்கு கணக்கில் 80 எனக்கோ 50, அவன் வீடு வாங்கிவிட்டான், அவன் கார் வாங்கிவிட்டான்; நான் ஒரு மோர் கூட வாங்கலையே என்றெல்லாம் நம்மிடம் இருப்பவற்றையும் எம்மையும் நாமே குறைபட்டுக்கொள்கிறோம்.

Monday, 24 June 2019

2. கோபம் எனும் போதை 

"கோபம் என்பது பிறர் செய்யும் தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை" என்றார் புத்த பெருமான். மனிதர்கள் DNA எனப்படும் பாரம்பரிய பதார்த்தங்களை உயிர் அலகில் கொண்டவர்கள். மனிதனின் சகல இயல்புகளையும் DNA தீர்மானிக்கின்றது என்பது விஞ்ஞானரீதியான நம்பிக்கை. இவ் DNAகள்  பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுவரும் பல தலைமுறைகளுக்குச் சொந்தமான ஒன்றாகும். சொல்லப்போனால் ஒரு மனிதன் ஒரு மனிதனல்ல என்பதைப்போன்றதாகும். இது போலவே மனிதர்களும் கோபம், பயம்,காமம்,சந்தோசம்,சந்தேகம்,குரோதம்,அன்பு,பாசம் என பல உணர்வுகளையம் உணர்ச்சிக்களையும் தம் மனங்களில் சுமந்தவர்கள்.

Wednesday, 12 June 2019

பஞ்ச தந்திரம் 


1. சுய ஒளி

சமயம் என்றால் என்ன? சமயம் என்பதன் பொருள் வாழும் முறை அல்லது வாழ்க்கை நெறி என்பதாகும். எந்தச் சமயமானாலும் சரி, அதன் தொழில் இறைவனை அடைதற் பொருட்டு அதாவது ஆன்மாக்களுக்கு முக்தி கிடைக்கச் செய்யும் பொருட்டு வாழ்வதற்கு ஒழுங்குகளையும் நெறிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு மார்க்கமாய் அமைத்தலாகும். சுய ஒளி என்பது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்க வேண்டிய ஒவ்வொரு விடயம் பற்றிய தனிப்பட்ட புரிந்துணர்வு ஆகும். எந்தச் சமயத்தவராயினும் எந்த நெறியை பின்பற்றுபவராக இருந்தாலும் தமக்குள் ஒரு சுய ஒளி இல்லாமல் விளக்கமற்று ஆகமங்களையும் வேதங்களையும் கடைப்பிடிப்பார்களாயின் அவர்கள் வாழ்க்கை நரகமாக மாறுவதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்டவர்கள் பிறர் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விடுவார்கள்.

                                                   ஆண்மை தவறேல்   நாம் அனைவரும் ஔவையார் எழுதிய நீதி  நூலான ஆத்திசூடியை கேள்விப்பட்டிருப்போம்...